பாடல்
என் உடல் தனிலொரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற் போல் துடித்து
உன் உடல் நோய் கண்டு இரவோடு பகலும்
கண் உறங்காது உடலிளைத்தும்
இன்னமுதூட்டி இன்ப தாலாட்டி
என்னை ஆளாக்கிய பெருமைக்கு
என்னிடம் இயற்கையில் உங்கள்
உள்ளுருகும் அன்பினுக்கு ஒரு கைமாறேது
என் உயர் தவப்பயன் அம்மையே அப்பா
இம்மையில் எனது கண் கண்ட
என் அருட் கடவுளம்மையே அப்பா
எனக்கொரு நற்கதியுண்டோ
என் அரும் நிதியாம் அம்மையே அப்பா
என் பிழை பொருத்தருள்வீரோ
என் உயிர் துணையாம் அம்மையே அப்பா
எங்கு சென்று உங்களை காண்பேன்
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நான்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
தாயே தந்தையே
தாயே தந்தையே
அருமை தாயே தந்தையே
என் அருமை தாயே தந்தையே
LYRICS
en udal thaniloru ee moitha podhu
ungaL kaNNil muL thaithaar pol thudithu
un udal noi kaNdu iravodu pagalum
kaN urangaadhu udaliLaithum
innamudhootti inba thaalaatti
ennai aaLaakiya perumaikku
ennidam iyarkaiyil ungaL
uLLurugum anbinikku oru kaimaaredhu
en uyar thavapayan ammaiye appaa
immaiyil enadhu kaN kaNda
en arut kadavuLammaiye appaa
enakoru nargadhiyuNdo
en arum nidhiyaam ammaiye appaa
en pizhai porutharuLveero
en uyir thuNaiyaam ammaiye appaa
engu sendru ungaLai kaaNben
ammaiyappaa ungaL anbai marandhen
ammaiyappaa ungaL anbai marandhen
arivilaamale naan
arivilaamale nandri marandhen
arivilaamale nandri marandhen
thaaye thandhaye
thaaye thandhaye
arumai thaaye thandhaye
en arumai thaaye thandhaye