பாடல்
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஹோய்.....
ஹையா ஏல ஏலோ ஏலே லேலேலோ...
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஒய்.....
ஹையா ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: ஹோ ஹோ ஹோ...ஆ... ஹோய்
ஏலேலோ.ஓஓ.. ஏல ஏலோ ஏலே லேலோ...
ஏல ஏலோ ஏலே லேலேலோ...
நீல சேலை கட்டி கொண்ட சமுத்திர பொண்ணு
நீ நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு
நீல சேலை கட்டி கொண்ட சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு
யாரை காண துடிக்கிரியோ கரையில நின்னு
அந்த ஆள் வராமல் திரும்புரியோ
சொல்லடி கண்ணு
யாரை காண துடிக்கிரியோ கரையில நின்னு
ஆள் வராமல் திரும்புரியோ
சொல்லடி கண்ணு...
ஓ ஓ ஓ...
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: வலையை வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன் உடலை
கலக்கவில்லையா
ஏலேலோ ஏ..லே..லோ
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: வலையை வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன் உடலை
கலக்கவில்லையா
கலக்கும்போது புதிய இன்பம்
பிறக்கவில்லயா
இன்பம் பிறந்த பின்பும் உன் துடிப்பு
அடங்கவில்லையா
நீல சேலை கட்டி கொண்ட சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு
ஓ ஓ ஓ...
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி தவிக்குதடி
இன்பத்தை அள்ள
ஏலேலோ ஏ..லே..லோ
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: எனக்கும் நெஞ்சம் துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி தவிக்குதடி
இன்பத்தை அள்ள
உனக்கு வந்த அனுபவத்தை
சொல்லடி மெல்ல
எனக்கும் ஒருவன் வந்து சேரும் போது
அவனிடம் சொல்ல
நீல சேலை கட்டி கொண்ட சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு
யாரை காண துடிக்கிரியோ கரையில நின்னு
அந்த ஆள் வராமல் திரும்புரியோ
சொல்லடி கண்ணு
ஓ ஓ ஓ...
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: ஆ ஆ ஆ...
குழு: ஏல ஏலோ ஏலே லேலேலோ...
சு: ஏலேலோ ஏ..லேலோ
ஹையா ஏல ஏலோ ஏலே லேலோ...
ஏல ஏலோ ஏலே லேலேலோ...